விஜயவாடாவில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் வாடபல்லி என்ற இடத்தில் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். இங்கு கருவறையில் 2 தீபங்கள் ஏற்றப்படுகின்றன. ஒன்று நரசிம்மரின் முகத்துக்கு அருகிலும், மற்றொன்று அவரது பாதத்துக்கு அருகிலும் உள்ளது. இதில் முகத்துக்கு அருகில் உள்ள தீபம் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கிறது. நரசிம்மரின் மூச்சுக்காற்றால்தான் அந்த தீபம் ஆடுகிறது என்கிறார்கள். அதே நேரம் அவரது பாதத்தின் அருகில் உள்ள தீபம் அசையாமல் உள்ளது.