சோழவந்தான்: தென்கரை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை உற்சவத்தையொட்டி, டிச., 15 ல் வைகையில் ஆராட்டு விழா நடக்கிறது.அன்று மதியம் 1 மணிக்கு புலி வாகனத்தில் சுவாமி ரத வீதிகளில் எழுந்தருள்வார். டிச., 19 ல் மாலை படி பூஜை, டிச., 20 இரவு திருவிளக்கு பூஜை, டிச., 27 காலை மண்டல பூஜை, மதியம் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.