மதுரை, சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர், கருப்புச்சாமி வேடம் புணைந்து பக்தர்கள் அணியணியாக ஆடிப்பாடி வருவர். இதில் திரியாட்டம் ஆடுவோரும், நீர் பீய்ச்சி விளையாடுவோரும் அதிகம் பேர் உண்டு. இவர்கள் அணிவதற்கென தயாரிக்கப்படும் பிரத்யேக ஆடைகளைத் தைப்போர், புதுமண்டபம் பகுதியில் அதிகமாக உள்ளனர்.