சிதம்பரம்: இளமையாக்கினார் கோவில் குளத்தை இளைஞர்கள் சுத்தம் செய்தனர். பிரசித்தி பெற்ற சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளம் சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியது. ஆனால் குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகள் அதிக அளவு மண்டியதால் தண்ணீர் நிறம் மாறி பயன்படுத்த முடியாமல் போனது. இந்நிலையில் இளமையாக்கினார் கோவில் தெரு மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நேற்று குளம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இளஞர்கள் குளத்தில் மண்டிக் கிடந்த ஆகாயத்தாமரைகளை மீன் பிடிக்கும் வலை மூலம் கொத்தாக கரைக்கு இழுத்து வந்து அதனை கூடையில் அள்ளி அப்புறப்படுத்தினர்.