பதிவு செய்த நாள்
11
டிச
2015
11:12
ஊத்துக்கோட்டை: தாராட்சி கிராமத்தில் நடந்த அய்யப்ப சுவாமி பூஜையில், உற்சவர் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எல்லாபுரம் ஒன்றியம், தாராட்சி கிராமத்தில், அய்யப்ப சுவாமி திருவிழா நடந்தது. இதையொட்டி, அங்குள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.விழாவை ஒட்டி, மாலை, அய்யப்ப சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, அய்யப்ப பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியும், பெண்கள், சிறுமியர் விளக்கு ஏந்திக் கொண்டு சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.