Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் ... கொம்பு தூக்கி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா கொம்பு தூக்கி அய்யனார் கோயில் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் விடாது துரத்தும் மழை: பம்பையில் வெளப்பெருக்கு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் விடாது துரத்தும் மழை: பம்பையில் வெளப்பெருக்கு!

பதிவு செய்த நாள்

15 டிச
2015
10:12

சபரிமலை: சபரிமலையில் மழை தினசரி அஜன்டாவாக மாறி வருகிறது. காலையில் மழை மேகம், பத்து மணிக்கு பின்னர் வெயில், மாலை மூன்று மணிக்கு பின்னர் மழை மேகம், ஐந்து மணி முதல் இரவு வரை மழை இதுதான் சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில் கால நிலை. ஓரிரு நாட்களை தவிர்த்தால் எல்லா நாட்களிலும் மழை பெய்துள்ளது. மாலையிலும், இரவிலும் பெய்யும் மழை பக்தர்களை மிகவும் சிரமப்படுத்துகிறது. பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு நான்கு ஷெட்டுகள் உள்ளது. இதில் அதிக பட்சமாக நான்காயிரம் பேர் தங்கலாம். மீதமுள்ளவர்கள் படும் பாடு வேதனையானது. கட்டிடங்களின் ஓரங்களில் இரவு முழுவதும் நின்று கொண்டிருக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்த பின்னர் அபிஷேகம் முடித்துதான் ஊருக்கு திரும்ப முடியும். நேற்று மாலை ஐந்து மணி வாக்கில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் பக்தர்கள் தங்கும் ஷெட்டுகளிலும் தண்ணீர் புகுந்தது. தங்குவதற்கு கூடுதல் ஷெட்டுகள் அமைக்க வேண்டும் என்பதுதான் சபரிமலையில் தற்போதைய முக்கிய தேவையாக உள்ளது.

பம்பையில் மீண்டும் வெளப்பெருக்கு:  சபரிமலையில் நேற்று மாலை பெய்த கன மழையால் பம்பை நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நடப்பு மண்டல சீசனின் தொடக்கத்தில் இதுபோன்ற பெருமழையால் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவேணியில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்கள் தண்ணீரில் மூழ்கியது. இதில் 30-க்கும் மேற்பட்ட கார்கள் முழுமையாக பழுதடைந்தது. அதன் பின்னர் திருவேணியில் பார்க்கிங் தடை செய்யப்பட்டிருந்தது. மழை சற்று குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பார்க்கிங் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ஐந்து மணி முதல் கன மழை பெய்து பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சன்னிதானம் மற்றும் பம்பையில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு வாகனங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. எனினும் சில டிரைவர்கள் வராததால் கார்கள் தண்ணீரில் மூழ்கியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar