கிறிஸ்துமஸ் வந்தால் தான் ஆண்டவரின் நினைவும், ஆலயத்தின் நினைவும் வர வேண்டும் என்பதில்லை. எப்போதுமே அவர் நம் நெஞ்சில் நிறைந்திருக்க வேண்டும். இதோ பைபிளில் இருந்து ஒரு வசனம்!“நான் கூப்பிட்ட நாளிலே (ஜெபம் செய்த நாளில்) எனக்கு மறுஉத்தரவு அருளினீர் (உடனே பலன் தந்தீர்). என் ஆத்துமாவிலே பெலன் (வலிமை) தந்து என்னைத் தைரியபடுத்தினீர்!” என்று.ஜெபம் பலம் வாய்ந்தது. வல்லமை நிறைந்தது. நாமாக, சில செயல்களைச் செய்யதிட்டமிடும் போது, பிசாசானவன் நம்மைப் பார்த்துபுன்முறுவல் செய்வான். நாம் ஜெப சிந்தனையற்றவர்களாக பரபரப்பாக பணியில் ஈடுபடும் போது புன்முறுவல் செய்வான். ஆனால் நாம் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கும் போது, பிசாசானவன் நம்மைப் பார்த்து நடுங்கஆரம்பிப்பான். அதை விட நாம் சிலராகக் கூடி ஜெபிக்கும் போது அவன் இன்னும் நடுநடுங்கிப் போகிறான். ஏனெனில், தேவன் நம்முடைய ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறார். பதிலளிக்கும் போது, நமக்கு நம்மால் ஆவதை விட, மேன்மையானது எது என்பதையறிந்து நம் ஒவ்வொருவருக்கும் மேன்மையானதைக் கொடுக்கிறார். இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் மட்டுமல்ல! தினமும் ஜெபம் செய்வதை வழக்கமாகக் கொள்வோம். அது ஏதோ கடமைக்காக இல்லாமல் ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும். ஆண்டவருடன் ஒன்றி ஜெபிக்க வேண்டும். அந்த ஜெபத்திற்கு ஆண்டவர் நிச்சயம் பலமும், பலனும் தருவார்.