கும்பகோணம் மகாமகக் குளத்தில் 5 கோவிலின் ஆடிப்பூர தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2011 12:08
கும்பகோணம்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கோவில்களின் தீர்த்தவாரி நேற்று நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தன்று அம்பாள் சுவாமிகள் கோவிலிலிருந்து வீதிவுலாவாக புறப்பட்டு மகாமக குளத்தில் அருள்பாலித்து அஸ்திரதேவர் புனித நீராடுவது வழக்கும்.அதன்படி நேற்று ஆதிகும் பேஸண்வரன் கோயிலிருந்து மங்களாம்பிகா அம“பாளும், நாகேஸ்வரன் கோயிலிலிருந்து பிரகன்நாயகி அம்பாளும், வியாழசோமேஸ்வரன் கோயிலி லிருந்து சோமகமலாம்பிகை அம்பாளும், அபிமுகேஸ்வரன் கோயிலிலிருந்து அமிர்தவல்லி அம்பாளும், சிறப்பு அலங்காரத்தோடு புறப்பட்டு வீதிவுலா வந்து பின்னர் மகாமக குளக்கரையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வந்தடைந்தனர்.பின்னர் காசிவிஸ்வநாதர் கோயிலில் உள்ள விசாலாட்சி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆடிப்பூர விழா தொடங்கியது. இந்த விழாவின் போது ஒவ்வொரு அம்பாளுக்கும் எண் ணெய், மஞ்சள், வளையல் உள்ளிட்ட சுமங்கலி பொருட் களை ஆகியவற்றை பக்தர்கள் அபிஷேக பொருளாக வழங் கினர். தொடர்ந்து ஐந்து அம்பாளுக்கும் தீபாரதனை நடந்தது. ந்த ஆராதனையில் சுமங்கலிப் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பின்னர் காசிவிஸ்வநாதர் கோயிலி லிருந்து புறப்பட்டு மகாமக குளக்கரையில் ஐந்து அம்பாளும் அருள்பாலித்தனர்.அப்போது அந்தந்த கோவிலிலிருந்து வந்திருந்த அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஐந்து அஸ்திரதேவரும் ஒரே நேரத்தில் மகாமக குளத்தில் தீர்த்தவாரி கண்டனர். அப்போது பக்தர்களும் குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.ஆடிப்பூர விழாவுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் செயல் அலுவலர்களும், பணியாளர்களும் செய்திருந்தனர்.