Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீரங்கம் - டிட்பிட்ஸ் அரியும், சிவனும் ஒண்ணு, அறியாதவர் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஸ்ரீரங்கம் கிளம்புவோமா! நிகழ்ச்சி நிரலை படியுங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2015
05:12

வைணவ திவ்ய தேசங்களில் முதல் தலம் ஸ்ரீரங்கம். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் இங்கு நடக்கும் விழாக்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பானது. டிச.10ல் திருநெடுந்தாண்டகத்துடன் இந்த விழா ஆரம்பமானது. இதை தொடர்ந்து டிச. 20 வரை பகல்பத்து திருவிழா நடக்கும். இதை திருமொழித் திருநாள் என்று கூறுவர். ஒவ்வொரு நாளும் சுவாமி நம்பெருமாள் வைரமுடி, பாண்டியன் கொண்டை, சவரிக் கொண்டை போன்ற பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலிப்பார்.

மோகினி அவதாரம்: டிச.20ல் உற்சவர் நம்பெருமாளுக்கு மோகினிஅலங்காரம் செய்யப்படும். அதாவது நாச்சியார் கோலத்தில் (பெண் வடிவம்) காட்சியளிப்பார்.தலையில் ஆண்டாள் கொண்டை, கையில் கிளி, கன்னத்தில் திருஷ்டி பொட்டுடன் கால்களை பெண் போலவே மடித்து அமர்ந்து, விதவிதமான நகைகளுடன் இருப்பார்.

சிம்மகதி: டிச.21 வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலைபூமிக்குள் இருந்து மேலே வந்தவர்! 1.00 மணிக்கு கோவில் திறக்கப்படும். 3.00 மணிக்கு மேனி முழுவதும் மாதுளை முத்து போல ரத்தினங்கள் பளபளக்க, ரத்தின அங்கி உடுத்தி, மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்படுவார். அப்போது சிங்கம் நடந்து வருவது போல பெருமாளின் நடை பார்க்க கம்பீரமாய் இருக்கும். இதை சிம்மகதி என்று சொல்வர். பெருமாள், கொடிமரத்தைக் கடந்து, பரமபத வாசலுக்கு உள்புறம் வந்து நின்றதும், கதவுகள் திறக்கப்படும்.
பரமபத வாசலைக் கடக்கும் போது, அவருடன் லட்சக்கணக்கான பக்தர்களும் உடன் வருவர். இரவு வரை ஆயிரங்கால் மண்டபத்தில் ரத்தின அங்கியுடன் காட்சியளிப்பார்.

தினமும் சொர்க்கவாசல் திறப்பு: ஏகாதசியைத் தொடர்ந்து வரும் 10 நாட்கள், அதாவது டிச.30 வரை ராப்பத்து விழா நடக்கும். இந்நாட்களில் தினமும் மதியம் 12 மணிக்கு சுவாமி நம்பெருமாள் சொர்க்க வாசலைக் கடப்பார்.  ஏகாதசியன்று பெருமாளைத் தரிசிக்க முடியாதவர்கள் இந்த நாட்களில் சொர்க்கவாசல் வழியே வெளியே வரும் பெருமாளைத் தரிசிக்கலாம்.

வேடுபறி உற்சவம்:
திருமங்கை மன்னன் தன் சொத்து முழுவதையும் ரங்கநாதரின் திருப்பணிக்கே செலவிட்டார். ஒருசமயம், கோவிலுக்கு திருமதில் எழுப்பும் பணியில் ஈடுபட்டார். பணம் காலியாகி விட்டது. எனவே பணக்காரர்களிடம் கொள்ளையடிக்க ஆரம்பித்தார். அவரை நல்வழிப்படுத்த விரும்பிய பெருமாள், தாயாருடன் புதுமணத் தம்பதி போல ஒரு மாட்டு வண்டியில் வந்தார். திருமங்கை மன்னன், அவர்களைத் தடுத்து, அவர்களிடம் இருந்த பொன், பொருளைக் கழற்ற வைத்தார். மணமகனின் கால் விரலில் கிடந்த மெட்டியை கழற்ற முயன்றார். முடியாததால், பல்லால் கடித்து இழுக்க முயன்றார். திருமாலின் திருவடி ஸ்பரிசத்தால், மன்னனுக்கு ஞானம் உண்டானது. உடனே வாடினேன் வாடி என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடினார். இதையடுத்து, திருமங்கை மன்னனை, பெருமாள் ஆழ்வாராக ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்த நன்னாளை வேடுபறி உற்சவம் என்ற பெயரில் கொண்டாடுவர். ஆழ்வாராக திருமங்கை மன்னனை ஏற்ற மகிழ்ச்சியில், பெருமாள் குதிரை வாகனத்தில் அங்குமிங்கும் துள்ளி விளையாடுவார். டிச. 28 ல் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

தாயார்கள் மூவர்: ரங்கநாயகி தாயார் சன்னிதியில், உற்சவர் விக்ரகத்தின் பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி விக்ரகங்கள் உள்ளன. இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது, மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar