திருப்பதி: திருமலையில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி உற்சவங்களை முன்னிட்டு டிச., 18 நள்ளிரவு முதல் டிச., 22 நள்ளிரவு வரை திவ்ய தரிசன டோக்கன் (பாத யாத்திரை தரிசனம்) வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. வைகுண்டம் காத்திருப்பு அறைக்குள் நுழைய வழங்கப்படும் ரீ என்ட்ரி ஆக்சஸ் கார்டு டிச., 19 மதியம் 12:00 மணி முதல் 22ம் தேதி நள்ளிரவு வரை நிறுத்தப்பட்டு உள்ளது.