பதிவு செய்த நாள்
19
டிச
2015
12:12
விக்கிரவாண்டி: தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் அமைந்துள்ள, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் மார்கழி மாத உற்சவம் துவங்கியது. முதல் நாள் உற்சவத்தையொட்டி, விநாயகர், நடராஜர், நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, நாகம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் நடராஜர் சிறப்பு அலங்காரத்துடன், புதியதாக கட்டுமானப் பணி நடைபெறும் கோவிலில் ஊர்வலம் நடந்தது. சிவனடியார் கல்யாணி அம்மாள் தலைமையில் மாலதியம்மாள், கோவிந்தராஜ் மற்றும் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் செய்தனர். அபிஷேகம் மற்றும் பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்திருந்தார். உபயதாரர் புதுச்சேரி மாநில மத்திய மாவட்ட காங்., முன்னாள் தலைவர் கண்ணன், ஊராட்சி தலைவி நாகேஸ்வரி சங்கர், ஏனாதிநாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.