பதிவு செய்த நாள்
19
டிச
2015
12:12
வில்லியனுார்: வில்லியனுாரில் ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை இன்று நடக்கிறது.
வில்லியனுார் கன்னிகாபரமேஸ்வரி ஆலயத்தில் ஐயப்ப சுவாமிக்கு திருவிளக்கு பூஜை கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது. தினம் இரவு 7:00 மணிக்கு மேல் லட்சார்ச்சனை, தீபாராதனை, அன்னதானம் நடந்துவருகிறது.
இன்று (19ம் தேதி) காலை 10:30 மணியளவில் லட்சார்சனை நடக்கிறது. அன்னதானத்தை
எதிர்கட்சி தலைவர் வைத்தி லிங்கம் துவக்கி வைக்கிறார். இரவு 7:00 மணிக்கு ஐயப்ப சுவாமி
அம்பல தீபாராதனை, 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நிகழ்ச்சி, பக்தி பாமாலை இசைக் கச்சேரி
நடக்கிறது. மாநில காங்., தலைவர் நமச்சிவாயம் எம்.எல்.ஏ., தலைமை தாங்குகிறார். மாநில காங்., செயலாளர் கண்ணபிரான் வரவேற்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, அம்பல தீபாராதனை செய்கிறார். விழா ஏற்பாடுகளை குருசாமி ஏகாம்பரம் தலைமையில் விழாக் குழுவினர் ரவிச்சந்திரன், ஜனார்த்தனன், ஜெயக்குமார், வீரமுத்து, முத்துவேலு, செல்வராஜ் மற்றும் கிரிகுருக்கள் செய்து வருகின்றனர்.