விழுப்புரம்: சிறுவந்தாடு, வாணியம்பாளையம் பெருமாள் கோவில்களில் வரும் 21ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது.
விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், மார்கழி மாத உற்சவத்தையொட்டி வரும் 21ம் தேதி அதிகாலை 2 :00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் பெருமாளுக்கும் அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. பின், மூலவர் புஷ்பம் மற்றும் துளசி அலங்காரத்தில் கனகவல்லி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து அதிகாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில், சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோல், வாணியம்பாளையம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலிலும், 21ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.