Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்னுார் ஐயப்பன் கோவிலில் மகோற்சவ ... அய்யனார்கோயில், சாஸ்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் கட்டணம் தரிசனம் நீட்டிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2015
01:12

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் கட்டண தரிசனம் நீட்டிக்க பட்டுள்ளதால், இலவச
தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இவர்களுடன் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அலைமோதுகிறது. இந் நிலையில் மார்கழி 1(டிச., 17) முதல் கோயில் நடை அதிகாலை 2.30 மணிக்கு திறந்து பள்ளியறை பூஜை முடிந்ததும், காலை 3.30 முதல் 5 மணி வரை கட்டணத்துடன்(ஒரு நபருக்கு ரூ. 50) கூடிய ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். இந்நிலையில் கடந்த 2 தினங்களாக ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்த தால், ஸ்படிகலிங்க தரிசன நேரம் காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய வழியில்லாத பக்தர்கள் அதிகநேரம் காத்திருந்து அவதிக்குள்ளா கின்றனர். நேற்று மட்டும் 5 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக 2 மணி நேரம்வரை காத்திருந்ததனர். முதியவர்கள் பலர் வரிசையில் நிற்க முடியாமல் அவதிப் பட்டனர். கூட்ட நேரிசலை சமாளிக்க முடியாமல் தனியார் (செக்யூரிட்டி) காவலர்கள் திணறினர். கட்டண தரிசனத்திற்கு கோயில் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுப்பதால், ஏழை பக்தர்கள் பாதிப்பதாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறியதாவது: ஸ்படிகலிங்க தரிசனம் 1 மணி நேரம் தான் நடக்கும். ஆனால் வணிக நோக்கத்துடன் பக்தர்களிடம் ரூ.50 கட்டணம் வசூலிப்பதற்காக 2 மணி நேரம் வரை தரிசனம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். கட்டண தரிசனத்தை ரத்து செய்ய முதல்வர் ஜெ., உத்தரவிட வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar