பதிவு செய்த நாள்
21
டிச
2015
11:12
திருப்பூர் : "திருப்பதி கோவில் உண்டியல் எண்ணும் பணியில், விருப்பமுள்ள பக்தர்கள் பங்கேற்கலாம் என, திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் அழைப்பு விடுத்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி உண்டியல் சேவைக்கு, திருப்பூரில் இருந்து பக்தர்கள் சென்றுள்ளனர். மாதந்தோறும் பரகாமணி சேவை எனும், ஸ்ரீவாரி உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு, பக்தர்கள் அனுப்பப்படுகின்றனர்; இதில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கலாம். திருமலையில் தங்கி, நான்கு நாட்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட வேண்டும். தினமும் சுவாமி தரிசனம், தங்குமிடம், உணவு வழங்கப்படும். வரும் மாதங்களில், இச்சேவையில் பங்கு பெற ஆர்வமுள்ள பக்தர்கள் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என, 66 வயதுக்கு உட்பட்டவர்கள், ஸ்ரீவாரி டிரஸ்ட் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். பாஸ்போர்ட் அளவு போட்டோ, முகவரி சான்று நகல் மற்றும் ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல் கொடுத்து, பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 0421 - 2424 401 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, செயலாளர் ராமகிருஷ்ணன், துணை தலைவர் செல்வம், கவுரவ ஆலோசகர்கள் முத்துநடராஜன், சச்சிதானந்தம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.