கரூர்: கரூர் செங்குந்தபுரம் சாலை, ஆதிபராசக்தி கோவிலில் பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல மாலை அணவித்துக் கொண்டனர். இவர்கள் ஐந்து நாட்கள் விரதம் இருந்து, கோவிலுக்கு செல்ல உள்ளனர். தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.