திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாசகப்பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 3:30 மணிக்கு பெருமாளுக்கு திருவாராதனம் மற்றும் புண்ணியாகவாஜனம் நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சொர்க் கவாசலை கடந்தார். பின், கோவிலை வலம் வந்து ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேப்போல் திருவெண் ணெய்நல்லூர் பாண்டுரங்கன் பஜனை மடத்தில் காலை 6:00 மணிக்கு சொர்க் கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. இதேபோல் சி.மெய்யூர் அலர்மேல்மங்கை சமேத லட்சுமிநாராயணபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.