கரூர்: பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த லிங்கத்தூர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே லிங்கத்தூர் ஆற்றங்கரையில் உள்ள காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்ததாகும். கரூர் மாவட்டத்திலேயே பெரிய சிவலிங்கம் இங்கு தான் உள்ளது. இந்தக் கோவில், தற்போது பக்தர்கள் ஸ்வாமியை வழிபட முடியாத அளவுக்கு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், இரண்டு மாதங்களுக்கு முன் கும்பாபிசேகம் செய்ய வேண்டி யாகசாலை பூஜையுடன் புனரமைப்பு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியர் அருட்பணி மன்றம், அக்னீஸ்வரர் வழிபாட்டு மன்ற அப்பர் உழவாரப்பணிக் குழுவினர் ஆகியோர் இணைந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.