Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் ... 2016 சந்திர தரிசனம் (மூன்றாம்பிறை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏகாதசி அம்மா! துவாதசி அப்பா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2015
03:12

பெரியவரைத் தரிசிக்க தஞ்சாவூரில் இருந்து காஞ்சி மடத்திற்கு 65 வயதுமுதியவரும், அவரது மனைவியும் வந்தனர். பெரியவரிடம் மூதாட்டி பெரியவா.... எங்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் டில்லியில வேலை பாக்குறான். இளையவன் கான்பூரில நல்ல வேலையில இருக்கான். மருமகள்களும், குழந்தைகளும் எங்கள் மீது பாசமா இருக்காங்க. எங்களையும், அங்கே வரச் சொல்லி கூப்பிட்டாலும், இவர் பிடிவாதம் பிடிக்கிறார். கோபக்காரரான இவருக்கு முன்னால, நான் சுமங்கலியா போய்ச் சேர்ந்துடணும். இவரும் எந்த கஷ்டமும் பட்டுடக் கூடாது என்று சொல்லி வருந்தினார்.  விஷயம் கேட்ட காஞ்சிப் பெரியவர், நீ போயிட்டா இந்த கோபக்காரரை யார் பார்த்துப்பா என்று கேட்டார்.  மவுனமாக நின்ற இருவரிடமும்,  ஒற்றுமையா இருங்கோ என்று சொல்லி பிரசாதமும் கொடுத்து வழியனுப்பினார். இருவரும் காமாட்சியம்மனை தரிசித்து விட்டு திரும்பினர். சிலநாட்கள் கழிந்ததும், முதியவர் பிள்ளைகளின் ஊருக்குச் சென்று தங்க சம்மதம் தெரிவித்தார். அதன்படி டில்லியிலுள்ள மூத்த பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டனர். மருமகள், பேரன், பேத்திகளின் பாச மழையில் பொழுது இனிமையாக கழிந்தது. ஆறு மாதமாகி விட்டது. ஒருநாள் இரவு முதியவரின் மனைவிக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. அந்த நாள் ஏகாதசியாக இருந்தது. நண்பர்கள், உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. மனைவியைப் பிரிந்த சோகத்தில் முதியவரும் கவலையில் ஆழ்ந்தார். என்ன ஆச்சரியம்.... மறுநாள் துவாதசி திதியன்று காலையில் முதியவரும் இறந்து விட்டார். கடமைகள் அனைத்தும் முறையாக நடத்தப்பட்டன.  இரு ஆண்டு கழித்து, மூத்தமகன் காஞ்சிபுரம் மடத்திற்கு பெரியவரைத் தரிசிக்க வந்தார்.  அப்போது பெரியவர், உன் அம்மாவின் ஆசை நிறைவேறிருச்சு. இறப்பில் கூட பிரியவில்லை. ஏகாதசியன்று போன அவள், மறுநாளான துவாதசியில் கோபக்காரரான உன் அப்பாவையும் அழைச்சுண்டு போயிட்டா பாத்தியா...பிதுர்கடமையை விடாம செய்து வா. உனக்கு ஆசியளிப்பா, என்றார். ஏகாதசியன்று அம்மாவும், துவாதசியன்று அப்பாவும் காலமான விஷயம் பெரியவருக்கு எப்படி தெரிந்தது? என்று வியந்த மூத்தமகன். முக்காலமும் அறிந்த ஞானி காஞ்சிப்பெரியவர் என்பதை அறிந்தார். அவரது திருவடியில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். (மகான் காஞ்சி பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar