கோயில் விமானம் என்பது பொதுவாக, ஆறு அங்கங்களைக் கொண்டது. இது ஷடங்க விமானம் என்றழைக்கப்படுகிறது. அவை அதிட்டானம், பித்தி, பிரஸ்தரம், கிரீவம், சிகரம், கலசம் என்பவை. இவை முறையே மனிதனின் பாதம், கால், தோள், கழுத்து, தலை, முடி (கிரீடம்) ஆகிய உறுப்புகளுக்கு இணையானவை எனக் கருதப்படுகிறது.