வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகிலுள்ள கோயிலில் சிவபெருமானுக்குரிய ஆவுடையில் நிற்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கலாம். அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவமூர்த்தி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் மூலவர் சன்னதியில் சொர்க்கவாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளன. வைகுண்ட ஏகாதசி தினத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்யம் பக்தர்களுக்குக் கிடைக்கும்.