காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொன் விளைந்த களத்தூர் என்ற தலத்தில் முன்குடுமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கருவறையில் இறைவனின் லிங்க பாணத்தின் மீது வழுவழுப்பான மேல் பகுதியில் குடுமி ஒன்று முன்புறம் விழுந்தவாறு காட்சி தருகிறது. இதனாலேயே இறைவன் முன் குடுமீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இதேபோன்று திருத்தணிக்கு அருகில் நந்தியோடை கரையில் அமைந்துள்ள பழையாறை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளும் வீரட்டானேஸ்வர பெருமானுக்கு பின் குடுமி உள்ளது குறிப்பிடத்தக்கது.