ஓசூர்: ஓசூரில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி, அம்மன் கோவிலை அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓசூர் நீலமேக நகரில், 40 ஆண்டு பழமையான சக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை, நீலமேக நகர் மற்றும் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் பராமரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை கோவிலுக்கு வந்த, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், கோவிலை இடித்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், 500 க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டு வசதி வாரிய இடத்தில் கோவில் இருப்பதால் அதை இடித்து அகற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த ஓசூர் நகர தி.மு.க., செயலாளர் மாதேஸ்வரன், அப்பகுதி கவுன்சிலர் சிசிகிருஷ்ணன் ஆகியோர், பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.