பதிவு செய்த நாள்
24
டிச
2015
11:12
நகரி : வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில், 21 நாட்களில், 64.83 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காளஹஸ்தி, வாயுலிங்கேஸ்வர சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் உண்டியலில், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.அந்த வகையில், 21 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் நிர்வாக அதிகாரி பிரம்ம ரம்பா முன்னிலையில், உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில், 64,83,345 ரூபாய் ரொக்கம், 6 கிராம் தங்கம், 208 கிலோ வெள்ளி மற்றும் 103 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.