திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராட்டின திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2015 11:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று(டிச., 25) ராட்டின திருவிழா நடக்கிறது. கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிச., 17ல் துவங்கி நடந்து வருகிறது. இன்று காலையில் மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலம் நடக்கிறது. மாலை தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரிஸ்வரர், பிரியாவிடை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடக்கும். கோயில் முன் ராட்டினத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, கோவர்த்தனாம்பிகை எழுந்தருள ராட்டின திருவிழா நடக்கும்.