ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. திருக்கல்யாணம் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் உண்டியல் கணக்கிடப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 46 லட்சத்து, 3 ஆயிரத்து 427 ரூபாய் ரொக்கம், 36 கிராம் தங்கம், 3 கிலோ 260 கிராம் வெள்ளி இருந்தது. கணக்கிடும் பணியில், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமல நாதன், செல்லம், பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.