கோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் வகையறா கோவில்களில், அமரபணீஸ்வரர், ஆதிநாராயண பெருமாள் ஆகிய கோவில்கள் உள்ளன. அமரபணீஸ்வரர் கோவிலில், நாளை (டிச., 26) திருவாதிரை திருவிழா நடக்கவுள்ளது. அதிகாலை, 5 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத மற்றும் நடராஜர் உற்சவமூர்த்திக்கு மகன்யாச அபிஷேகம் நடக்கிறது. காலை, 6 மணிக்கு தீபாராதனையும், 4 மணிக்கு தேர்வீதி திருவுலா காட்சியும் நடக்கிறது. உதவி கமிஷனர் முருகையா ஏற்பாடுகளை செய்து வருகிறார்.