உடுமலை: பிரசன்ன விநாயகர் கோவிலிலுள்ள சிதம்பரேஸ்வரர் சுவாமிக்கு, ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணி அளவில் சிதம்பரேஸ்வர சுவாமிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், கோவில் சுற்றுப்பகுதியில் சுவாமியின் திருவீதி உலா வைபவமும் நடந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக இன்று மாலையில் மஹா அபிேஷக பூஜை நடக்கிறது.