தென்கரை,: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன், திருமூலநாதர் சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை, திருப்பாவை பாட அம்மன், சுவாமி வீதி உலா நடந்தது. மாலையில் ஊடல் உற்சவத்தில் சுந்தரர் நாயனார் எதிர்சேவை பூஜை நடந்தது. சிவாச்சாரியார் நாகராஜன் பிரசாதம் வழங்கினார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி விஸ்வநாத் செய்திருந்தார்.