1. மார்கழி மாதத்திற்கு தனுர் மாதம் என்ற பெயரும் உண்டு. இந்த மாதத்தில் சூரியன் தனுசு ராசியில் பிரவேசிப்பதால் அந்த பெயர் ஏற்பட்டது. 2. மார்கழி மாதத்தில் தான் சிதம்பரம் நடராஜபெருமாள் ஐந்தொழில்களையும் புரிகிறார். இந்த மாதத்தில் அங்கு நடைபெறும். ஆருத்ராதரிசனமும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும். ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவும் சிறப்பு பெற்றவை. 3. சபரிமலை ஐயப்பன் அவதரித்ததும் மார்கழி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தன்று தான். 4. திருப்பாற் கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்ததும் ஓர் மார்கழி மாதம்தான். 5. மார்கழி மாதத்தில் தான் மகாவிஷ்ணு மகா லட்சுமியை மணந்து கொண்டார். 6. மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல் காலம் என்பதால் மார்கழி மாதம் முழுவதும் இறை வழிபாடுகளில் ஈடுபடுவது சிறப்பு.