சில விஷயங்களை மறைக்கும்போது, அது என்ன சிதம்பர ரகசியமா? என்று கேட்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது ஏன் அப்படி கேட்கிறார்கள் தெரியுமா? சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமானுக்கு அருகில், சுவரில் ஒரு இயந்திரம் இருக்கிறது. அதையே ரகசியம் என்று சொல்கிறார்கள். அதற்கு தீபாராதனை செய்யும் போதுதான், அதன் மேல் அணிந்துள்ள பொன்னால் ஆன வில்வ மாலையை காணலாம். இந்த ரகசி யத்தை எண்ணி, எளிதில் புரியாத செய்திகளையெல்லாம் சிதம்பர ரகசியமாக இருக்கிறது. என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.