தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், என்பது முன்னோர் வாக்கு. நாம் வாழ்க்கையில் தானதர்மங்கள் செய்து வாழ வேண்டும். அந்த அடிப்படையில் செய்யப்படும் ஒவ்வொரு தானத்திற்கும், ஒவ்வொரு விதமான பலன் உண்டு. வஸ்த்தர தானம் செய்வதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். அன்னதானம் செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும். தாம்பூல தானம் செய்வதால் சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பு உண்டு. ÷ காயில்களின் தீபதானம் செய்வதால் உயர்ந்த பதவிகளும், பொறுப்புகளும் வந்து சேரும். பூமிதானம் செய்வதால் குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.