கூடலுார்: முதுமலை வழியாக, சபரிமலைக்கு நடைபயணம் மேற்கொள்ளும், ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பல ஐயப்ப பக்தர்கள், கூடலுார் வழியாக, நடைபயணமாக சபரிமலை செல்கின்றனர். இவர்கள், முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும் போது, மாலை மற்றும் இரவு நேரங்களில் வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.மேலும், சில நேரங்களில் ஓய்விற்காக சாலையோரத்தில் உறங்கும் போதும் யானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, வனப்பகுதியை கடக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்க, வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.