பதிவு செய்த நாள்
30
டிச
2015
12:12
திருப்பதி: ஸ்ரீபக்தாஞ்சனேய லட்டு, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், தவளேஸ்வரத்தில், ஸ்ரீபக்தாஞ்சனேய என்ற இனிப்பு கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனுபாபு, விநாயக சதுர்த்தி அன்று, பெரிய லட்டு தயாரித்து வருகிறார். அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக, பெரிய லட்டு தயாரித்து வருவதால், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார். அவர், 2011ல், 5,570 கிலோ; 2012ல், 6,599 கிலோ; 2013ல், 7,132 கிலோ; 2014ல், 7,858 கிலோ; 2015ல், 8,369 கிலோ எடை உள்ள லட்டு தயாரித்து உள்ளார்.