தேனி: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் குளோபல் ஆர்க்கனைசேஷன் பார் டிவைனிட இந்தியா டிராஸ்ட் சார்பில், 2016 புத்தாண்டு எல்லாவித நன்மைகளும் ஏற்பட வேண்டி ஹரே ராம மஹாமந்திர கூட்டு பிராத்தனை நடந்தது. புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் 2016 என திருவிளக்கு ஏற்றி கூட்டு பிராத்தனை செய்யப்பட்டது. கிருஷ்ண சைதன்யதாஸ் இறை நாமம் பற்றி பேசினார்.