திருவெண்காடு திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமான் அபூர்வ வடிவம் கொண்டவர், 14 புவனங்களைக் குறிக்கும் 14 சதங்கைகள் கொண்ட காப்பு, பிரணவம் முதல் நமக வரையில் உள்ள 81 பத மந்திரங்களை உணர்த்தும் 81 சங்கிலி வளையங்கள் கோர்த்த அரைஞாண், 28 ஆகமங்களைக் குறிக்கும் 28 எலும்புத்துண்டுகள் கோர்த்த ஆரம், 16 கலைகளைக் குறிக்கும் வகையில் 16 சடைகள் தரித்து, தத்துவ உருவாகவே பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.