பதிவு செய்த நாள்
02
ஜன
2016
03:01
மேச்சேரி: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக, மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, வரும், 23ம் தேதி நடக்கிறது. வரும், 22ம் தேதி காலை, 9 மணிக்கு கணபதி ஹோமம், மதியம், 1 மணிக்கு புஷ்ப அலங்காரம், 2 மணிக்கு, நாதஸ்வர, தவிலிசை நிகழ்ச்சி, மாலை, 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதையடுத்து, தேசமங்கையர்கரசியின், நெஞ்சுக்கு நிம்மதி, பத்ரகாளியம்மன் சன்னதி, ஆன்மிக சொற்பொழிவும், இரவு, 7.30 மணிக்கு, சேலம் அபிநயா நாட்டிய கலாலயா மாணவியரின் மஹிஷாசுரமர்த்தினி நாட்டிய நாடகமும் நடக்கிறது. வரும், 23ம் தேதி காலை, 10 மணிக்கு, பால்குட ஊர்வலம், மாலை, 5 மணிக்கு, அம்மன் வீதி உலா, மாலை, 6 மணிக்கு, ருக்மணி அம்மையார் சொற்பொழிவு, இரவு, 7.30 மணிக்கு, பேராசியர் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் தலைமையில், நகைச்சுவை இன்னிசை பக்தி பாட்டுமன்றம் நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி காலை, 6 மணிக்கு, சிறப்பு அபி?ஷகம், காலை, 10 மணிக்கு, கும்பாபிஷேக மலர் வெளியீடு, மாலை, 6 மணிக்கு, கடையம் ராஜீயின், சீர்காழி சிவசிதம்பரம், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், பாடகி மாலதி லஷ்மண் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை செயல்அலுவலர், பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்கின்றனர்.