பதிவு செய்த நாள்
02
ஜன
2016
03:01
குன்னுார்: மாவட்டத்தில் உள்ள கோவில்கள், சர்ச்களில் பிரார்த்தனைகள் நடந்தது.
குன்னுார் தந்திமாரியம்மன் கோ வில், துர்கையம்மன் கோவில், ஓட்டுப்பட்டறை முத்தாலம்மன் கோவில், பழைய அருவங்காடு முத்துமாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், வண்டிச்சோலை வெங்கடாசலபதி கோவில், எடப்பள்ளி ஷீரடி சாய்பாபா கோவில், உட்பட பல கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
குன்னுார் மவுன்ட்ரோடு பகுதியில் உள்ள சவுடேஸ்வரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பெருமாள் தங்க ஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து,
சவுடேஸ்வரியம்மனுக்கு தங்க கவச சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகல் 12:00 மணிக்கு
ஐயப்பனுக்கு மகா நெய் அபிஷேகம், முருகருக்கு கிருத்திகை ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடந்தன.
விநாயகர் கோவில் ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், 27வது ஆண்டு அன்னதான விழாவில்,
சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாய்ஸ்கம்பெனியில் ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, நேற்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. குன்னுார் அந்தோணியார் தேவாலயம், பேரக்ஸ்
சூசையப்பர் தேவாலயம் உட்பட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன.
இதேப்போல, ஊட்டி இருதய ஆண்டவர், புனித மேரீஸ், தெரசன்னை, அந்தோணியார், சி.எஸ்.ஐ., தாமஸ் வெஸ்லி உட்பட தேவலாயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. கோத்தகிரி, மாதா கோவில் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி நடத்தப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இளைஞர்கள் பட்டாசு வெடித்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.