Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் ... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிய உற்சவர் சிலை? காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவர் கால சிற்பங்கள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
பல்லவர் கால சிற்பங்கள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு!

பதிவு செய்த நாள்

04 ஜன
2016
10:01

பண்ருட்டி: பண்ருட்டி அருகே, 1300 ஆண்டுகளுக்கு முந்தைய,  பல்லவர் கால சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே சி.என். பாளையம் உச்சிப்பிள்ளையார் கோவிலில், பொங்கல் பண்டிகையின் காணும்பொங்கல் திருவிழாவையொட்டி, மூன்று நாட்களுக்கு முன் பராமரிப்பு பணி நடந்தபோது பழங்கால செங்கற்களும், பானை ஓடுகளும் கிடைத்தன. இவற்றை, கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன், சி.என்.பாளையம் தமிழ் பேராசிரியர் வேல்முருகன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். பின்னர், நிருபர்களிடம் கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறியதாவது: சி.என். பாளையம் உச்சிப்பிள்ளையார் கோவில்  கி.பி. 6ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது என அறியப்படுகிறது. இக்கோவிலும், ஊரும் 5000 வருடத்திற்கு முந்தையவை. இங்கு கிடைத்துள்ள கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும், செங்கற்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.

1300 ஆண்டுகளுக்கு முன்பு மலையாண்டவர் கோவில் என்ற பெயரில் சிவன் கோவிலாக இருந்த இக்கோவில், பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டபோது பிள்ளையார் கோவிலாக அழைக்கப்பட்டது. இங்கு கண்டறியப்பட்ட சப்த கன்னியரில், தற்போது இரண்டு கன்னியர் சிற்பங்கள் மட்டுமே உள்ளன. மற்ற ஐந்து கன்னியர் சிற்பங்கள் இந்த மலைக்குள் புதைந்துள்ளன. 92 செ.மீ., உயரம், 43 செ.மீ., அகலம் கொண்ட சிற்பம் -மகேசுவரி என்றும், 86 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம் கொண்ட சிற்பம் பிராமி என்றும் அறியப்பட்டுள்ளன. இக்கோவில் கொடிமர பீடத்தின் அடி பகுதியிலுள்ள செப்புத் தகட்டில், ராசராசேசுவரர் சந்நிதி என பொறிக்கப் பட்டிருப்பதால், முதலாம் ராசராச சோழர் காலத்தில் இக்கோவில் மீண்டும் புனர் நிர்மானம் செய்யப்பட்டு இருக்கலாம். இங்கு, பல்லவர், சோழர், விஜயநகர நாயக்கர் கால சிவ லிங்கங்களும், சிற்பங்களும் காணப்படுவதால்,  முந்தைய காலங்களில் இருந்த கோவில் முற்றிலும் சிதைவுற்று, 500 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக எழுப்பப்பட்டிருக்கலாம். இவ்வாறு, கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar