கர்ணனை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்ட குந்திதேவி, அந்த பாவம் நீங்க உமேச முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். அவர் மாசிமகம் அன்று 7 கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றார். அப்போது திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. 7 கடலை நினைத்து மாசி மகம் அன்று அதில் நீராடு என்று அசாரீ கேட்டது. குந்தியும் அப்படியே செய்து பாவ விமோசனம் பெற்ற தீர்த்தம் சப்தசாகர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.