தமிழகத்தில் அனுமனுக்கு வடை மாலை, வெண்ணெய் முதலானவை சாத்துவது வழக்கம். கேரள மாநிலம் தலைச்சேரி அருகில் உள்ள திருவெண்காடு கிராமத்திலுள்ள ராமசாமி கோவிலில் அனுமனுக்கு அவல் நைவேத்யம் செய்யப்படுகிறது. அனுமனுக்கு அவல் பிடிக்கும் என்பது இந்த கிராம மக்களின் நம்பிக்கை. இங்கு ராமரும், அனுமனும் மட்டுமே அருள்பாலிக்கிறார்கள். அனுமன் ராமனுக்கு எதிரில் வணங்கியபடி காட்சி தருகிறார்.