Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இதோ ஒரு அற்புத நிகழ்ச்சி! உள்ளத்தில் உறுதி இருந்தால் உலகமே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெள்ளத்துக்கு யார் காரணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2016
03:01

சமீபத்தில் தமிழகத்தின் பெரும் பகுதிகளில் வெள்ளம் வந்தது. சென்னை மக்கள் ரொம்பவே சிரமப்பட்டனர். இது மட்டுமல்ல! உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதோ ஒரு பிரச்னையால் மக்கள் சிரமப்படுகிறார்கள். இவ்வாறு உலக மக்கள் வேதனையடைய தேவன் ஏன் அனுமதிக்கவேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆண்டவரே! செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்? என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்தினீர்? இந்த வெள்ளம் ஏன் எங்களை இப்படி வருத்தியிருக்க வேண்டும்? எங்கள் உடைமைகளை ஏன் பாழாக்கினீர்? இப்படி தங்கள் கஷ்டத்தைச் சொல்லி ஆண்டவரிடம் மக்கள் புலம்புகிறார்கள். தமிழகத்தில் ஏன் இவ்வளவு வெள்ளம்? ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விதிமீறல்களை ஏன் அனுமதிக்கிறீர்கள்? என்று உயர் அதிகாரியிடம், ஒரு நிருபர் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்? என்னை ஏன் குற்றப்படுத்தி கேள்வி கேட்கிறீர்கள்! ஒவ்வொருவரும் துணிந்து கட்டுமான விதிகளை மீறுகிறார்கள்.

அப்படி மீறுவோர் தான் விபத்தில் சிக்குகிறார்கள். வேதனையை அவர்களே வரவழைத்துக்கொள்கிறார்கள், என்பார். இது நிஜம் தானே! சட்டத்தை மீறுவதால் தானே துன்பம் வருகிறது! அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களையும் கெடுத்து நம்மையும் கெடுத்துக் கொண்டது யார்? குளம் என்றே தெரியாமல் வீடு கட்டியது யார்? இதே போல், ஆண்டவருடைய சட்டப் புத்தகமான வேதாகமத்தை (பைபிள்) புறக்கணிப்பதால் தான் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள்.  ஆண்டவர் நமக்கென சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார். பொய் சொல்லாதே, களவு செய்யாதே, உழைக்காதவனுக்கு உண்ண உரிமையில்லை... இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லையே! சரி... ஒரு சர்வாதிகாரியைப் போல் ஆண்டவர் நமக்கு ஆணையிட்டிருக்கிறாரா? இல்லையே! இன்னின்ன செயல்களைத் தவிர்த்தால், நீ சுகமாக இருக்கலாம் என்ற கரிசனையுடன் தானே சொல்லியிருக்கிறார்! அழகான உலகத்தைக் கொடுத்த தேவன், அங்கே வாழும் முறையையும் கற்றுத் தந்துள்ளார். கொடுக்கப்பட்ட செயல்முறைக்கு மாறாக நடந்தால், ஒரு மின்சாதனம் எப்படி செயலிழக்குமோ அதுபோல், ஆண்டவரின் கட்டளைகளை மீறி நடக்கும் போது பிரச்னைகள் தலை துõக்குகிறது. ஆண்டவர் கொடுத்த சரீரத்தைக் குடித்தும், புகைபிடித்தும் கெடுக்கிறோமே! பின்னர் கஷ்டம் வரத்தானே செய்யும்! பைபிளில் ஒரு வசனம், உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை. அது காயமும், வீக்கமும், நொதிக்கிற ரணமுமுள்ளது. அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயால் ஆற்றப்படாமலும் உள்ளது என்கிறது. மனித சரீரத்தின் உண்மைத்தன்மை இந்த வசனத்தில் வெளிப்படுகிறது. மனித உடல் ஒரு சதைப்பிண்டம். இதை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போடுகிறார்கள் என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாவத்தின் பலன்களே துன்பமாக நம்மைத் தேடி வருகின்றன. ஆண்டவரிடம் பாவமன்னிப்பு கேட்டு அதில் இருந்து விடுபடுங்கள் என்பது இந்த வசனம் உணர்த்தும் கருத்து. நமது துன்பங்களுக்கு நாமே காரணம் என்பது புரிந்து விட்டதல்லவா! இனி தவறு செய்ய மாட்டீர்கள்தானே!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar