சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கல்யாணசுந்தரி கடம்பவனேஸ்வரர் கோவிலில் வரும் 8ம் தேதி ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மகா தீபாரதனை நடக்கிறது. சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கல்யாணசுந்தரி கடம்பவனேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களில் யோக நிலையைக் கொண்ட இந்த தலத்தில் அனைத்து நவக்கிரகங்களும் தம்பதியருடன் அருள்பாலி க்கின்றனர். இங்கு வரும் 8ம் தேதி ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ேஹாமங்கள், மாக தீபாராதனை நடக்கிறது. பின்னர் நவக்கிரகங்களில் ராகு, கேதுவுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடக்கிறது.