Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் புத்தாண்டு ... கம்பவனேஸ்வரர் கோவிலில் ராகு, கேது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனி பகவான் கோவில் யானை முகாமிற்கு புறப்பட்டது!
எழுத்தின் அளவு:
திருநள்ளார் சனி பகவான் கோவில் யானை முகாமிற்கு புறப்பட்டது!

பதிவு செய்த நாள்

06 ஜன
2016
12:01

காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவில் ப்ரக்குருதி யானை நேற்று மேட்டுபாளையம் தேக்கம்பட்டியில் நடக்கும் புத்துணர்ச்சி முகாமிற்கு புறப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு ஆசி வழங்கவும், விழாக்காலங்களில் சாமி புறப்பாடு சமயத்தில் உடன் செல்லவும் கோவில் யானை செல்வது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலை சிமோகாவில் உள்ள சக்ரபால் யானைகள் முகாமில் இருந்து ப்ரக்குருதி யானை கடந்த 2011ம் ஆண்டு வாங்கப்பட்டது. தற்போது 12 வயதை நெருங்கும், இந்த இளம் பெண் யானைக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புத்துணர்வு முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த முகாமில் திருநள்ளார் சனிபகவான் கோவில் ப்ரக்குருதி யானையும் பங்கு பெற புதுச்சேரி அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்தது. இதையெடுத்து திருநள்ளார் ப்ரக்குருதி யானை கோயம்பத்துõர் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடக்கும் முகாமிற்கு நேற்று புறப்பட்டது. யானையுடன் 2 பாகங்களும் சென்றனர். முகாமிற்கு யானையை வழியனுப்பும் நிகழ்ச்சி கோவிலில் சிறப்பாக நடந்தது. கலெக்டர் வல்லவன்,கோவில்கள் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் சிவாச்சார்யர் ராஜாசுவாமிநாதர்,சுரேஷ், கார்த்திக் ஆகியோர் யானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாரதனை காண்பித்தார். பின் யானைக்கு பிரசாதம், பழங்கள் வழங்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு முகாமிற்கு புறப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar