பதிவு செய்த நாள்
06
ஜன
2016
12:01
கூடுவாஞ்சேரி : காயரம்பேடு கிராமத்தில் உள்ள காசியம்மன் கோவிலில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணி துவங்கி உள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த, காயரம்பேடு கிராமத்தில், காசியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரமி, இந்திராணி, கவுமாரி, வராகி, சாமுண்டீஸ்வரி, வைஷ்ணவி, விநாயகர், பரசுராமன் ஆகியோர் உள்ளனர். இக்கோவில், 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. 27 ஆண்டுகளுக்கு முன், கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து, கோவில் பராமரிப்பு இல்லாததால், சிதிலமடைந்தும், கோபுரங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. கடந்த மாதம் பெய்த கன மழையில், கோவில் உள்ளே மழைநீர் கசிந்து, தண்ணீர் தேங்கியது. இதனால், கோவில் கோபுரம், சுற்றுச்சுவர் மற்றும் கோவிலை புதிப்பிக்க, கிராமவாசிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் உட்பட அனைத்து பகுதியையும், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், பணிகள் செய்ய முடிவெடுத்தனர். அதை தொடர்ந்து, நேற்று முன்தினம், திருப்பணி துவங்கி உள்ளது.