திருப்பதியில் தரிசனமளிக்கும் ஏழு மலையானின் கண்களை மறைத்தப்படி வழக்கமாக அணிந்திருக்கும் திரு நாமத்தை நீக்கி விட்டு, பூக்களாலான அலங்காரத்தில் குளிர்ந்த விழிநோக்கோடு திருக்காட்சியளிப்பதே பூவங்கிதரிசனம் எனப்படுகிறது. இந்த தரிசனத்தின்போது, எம்பெருமானின் திருவிழி நோக்கை முழுமையாகப் பெறமுடியும்.