பரமக்குடி அருகே உள்ள நயினார்கோயில் நாகநாதர் பிணிபோக்குவதில் வல்லவர். தீர்க்க முடியாத நோயுடன் அவதியுறும் குழந்தைகளை இக்கோயிலுக்குக் கொண்டு வந்து, நாகநாதர் முன் கிடத்தி, குழந்தையை நீயே வைத்துக்கொள். ஆயுளைக் கொடுப்பாயோ? அல்பாயுசுலே எடுப்பாயோ? என்னவோ செய்! என்று ஒப்படைத்து விடுவர். நாகநாதர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை நோய் நீக்கி, நீண்ட ஆயுளை அளித்தபின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தருமாறு வேண்டுவர். அப்போது, கொடி மரத்தினருகே, குழந்தைகளை வைத்து ஏலம் விடுவர். காவலாளி ஏலத்தை முடித்து, பிள்ளைகளை பெற்றோர் வசம் ஒப்படைப்பர். இதற்கு விற்று வாங்குதல் என்று பெயர். மதப்பாகுபாடின்றி அனைத்துக் குழந்தைகளும் இங்கு ஏலம் விடப்படுவது சிறப்பு!