சிவகாசி கோயில்களில் இல்லை ஆடை கட்டுப்பாடு காற்றில் பறக்கிறது உயர்நீதிமன்ற உத்தரவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2016 11:01
சிவகாசி: சிவகாசியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற ப்படுவதில்லை. இதை சுட்டிக் காட்டி தடுக்க ஒரு அதிகாரியும் இல்லாத நிலையில் உயர்நீதிமன்ற நிதிபதி உத்தரவு காற்றில் பறக்கும் நிலை தொடர்கிறது. கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வர வேண்டும் என உயர்நீதிமன்றம் அறநிலைத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த கட்டுப்பாடு ஜன., 1 முதல் அனைத்து இந்து கோயில்களில் அமலுக்கு வந்தது. அதன்படி ஆடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. ஆனால் சிவகாசியில் உயர்நீதிபதி உத்தரவு காற்றில் பறக்கும் நிலை உள்ளது. இங்குள்ள சிவன்கோயில், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் ஆடைகட்டுப்பாடு பற்றி எடுத்துகூற யாரும் இல்லை. பக்தர்களும் ஆடைகட்டுப்பாடின்றி கோயிலுக்குள் சென்று வருகின்றனர். இதை தடுக்க கோயில் முன் ஆடை கட்டுப்பாடு குறித்து போர்டு கூட இல்லை. இனியாவது அறநிலைத்துறையினர் நீதிமன்ற உத்தரவின் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே சிவகாசி பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.