வெயிலுகந்த விநாயகர் கோவில் குளம்: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2016 12:01
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயீல் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய திருக்கோவில்களில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலும் ஒன்று. ஆண்டுதோறும் சதுர்த்தி விழாவின் போது சித்தி,புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு விநாயகரை தரிசிப்பது வழக்கம். மேலும் இங்கு உள்ளூர், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்துசெல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விநாயகர் கோயிலின் அருகில் குளம் உள்ளது. ஆரம்பத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யவும், குடிநீராகவும் பயன்படுத்தபட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் நாளடைவில் தண்ணீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. குளத்தை தூர்வாரி சீரமைக்கவும், கால்நடைகள் இறங்காதவாறு சுற்றி முள்வேலி அமைக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.