ஆதிபுரீஸ்வரர் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி சிறப்பு யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2016 11:01
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில், ராகு- - கேது பெயர்ச்சிக்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு, பள்ளிக்கரணை, வேளச்சேரி- தாம்பரம் பிரதான சாலையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில், நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.ராகு- கேது பெயர்ச்சி நேரமான, காலை 10:30 மணியில் இருந்து, 12:30 மணி வரை யாகம் தொடர்ந்து நடைபெற்றது. அதன்பின், ராகு-கேது சிலைகளுக்கு, பக்தர்களே பாலபிஷேகம் செய்தனர்.